சிறுகதை

இறைவனிடம் கேள்வி- தருமபுரி சி.சுரேஷ்

முருகன் வருத்தப்பட்டான் தெளிவின்மையில் இருந்தான் தனக்குள்ளே பேசிக்கொண்டான்

என்னை போல் எத்தனையோ பேர் இங்கு உயிருடன் செத்துக் கொண்டிருக்கிறார்கள் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என ஔவை பாட்டி பாடிவிட்டு சென்றுவிட்டார்கள்

நானோ மானிட்டனாய் பிறந்ததற்காய் வேதனைப்படுகிறேன், துக்கப்படுகிறேன், கவலைப்படுகிறேன், சலிப்பு அடைகிறேன், வியாகுலப்படுகிறேன்

இந்த உலகில் பல மனிதர்கள் பணம், பதவி, பட்டம், அந்தஸ்து, பரம்பரை அந்தஸ்து இவைகளாலே மற்ற மனிதர்களின் தரம் பிரிக்கிறார்கள்

இன்னும் சிலர் சாதி, சமய கோட்பாடுகளால் மனிதர்களை தரத்தை அலசி ஆராய்கிறார்கள்

குழந்தையாய் இருக்கும் வரை எந்த பாகுபாடும் பார்க்காத இந்த சமுதாயம் வளர வளர பிரித்து விடுகிறது பிரித்து விடுகிறார்கள்

காலில் முள் குத்திடும் வலியை சொல்வதை விட அவரவர்கள் அனுபவித்தால் தான் தெரியும்

அன்று சட்டக் கல்லூரி விடுமுறை என்பதால் தன் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முருகனை பார்க்க வந்தான் ரவி

வரப்பில் சலசலப்பு ஒளியை ஏற்படுத்திய வண்ணம் நடந்து வந்த ரவியை கண் நோக்காமல் தீவிர சிந்தையில் பரப்பில் ஓடிக் கொண்டிருந்த சலசல தண்ணீரை பார்த்த வண்ணமாய் கிடந்தான் முருகன் தூரத்திலிருந்து ரவி அவனை கவனித்தவனாய் அருகே வந்து

ரவி “என்னடா ரொம்ப யோசிச்சிட்டு இருக்கே மனசுல என்ன வெச்சி இருக்க சொல்லு” என்றான்

ரவி பெருமூச்சு விட்டவனாய்”சொல்லி என்ன ஆகப்போகுது” என புதிர் போட்டான்

என்னடா இது காலம் காத்தாலே சோர்ந்த மன நிலைமையில் முருகன் இருக்கிறானே என யோசித்த வண்ணம்”சொன்னாதானே ஆகுமோ ஆகாதன்னு முடிவுக்கு வர முடியும்”என்றான் ரவி

“சரி சொல்றேன் இந்த பூமியில் மனிதர்களுக்குள் பல பாகுபாடுகள் ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மேலானவர்கள் இப்படி இருக்கும் இந்த சமுதாயத்தில் சொல்லப்படுகிற மனிதநேயம் என்பது உண்மையா”

“ரொம்ப யோசிக்காத ஒரு சாரார் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக முழு உலகத்தையும் எல்லா மனிதர்களையும் நாம் மனித நேயம் இல்லாதவர்கள் என்று கூறி விட இயலாது எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற அரசியல்ல நுழையிறயா ஒழுங்கா படிப்பு பாரு உன் எதிர்காலத்தை பாரு” என்றான்

“சரி நம்ம எல்லாருக்கும் ஒரே கடவுள் தானே பாகுபாடு கிடையாது தானே அப்படி இருக்க நாம் எல்லாரும் கடவுளின் குழந்தைகள் என சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் ஏன் சாதி சமயம் பாகுபாடுகளை பார்க்கிறார்கள்”

“அது அவரவர்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்திக் கொண்டது பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டது முன்ன இருந்த மாதிரி தீவிரவாதம் எங்கும் இல்லை இப்ப எவ்வளவோ பரவாயில்லை முன்ன டீக்கடையில தனித்தனி டம்ளர் வச்சிருந்தார்களாம் ஊருக்குள்ள பொதுவா எல்லாரும் நடமாட முடியாதாம்

இன்னைக்கு எவ்வளவோ மாற்றம் நடந்துட்டு இருக்கு

சாதி சமய பாகுபாடு பார்ப்பது அறிவுப்பூர்வமானதல்ல நான் எனது என்னுடைய எனும் வார்த்தைகளை மையமாய் கொண்டு ஒரு வட்டத்திற்குள் இயங்குகிற அந்த குப்பைகளைகுறித்து ஏன் கிளற வேண்டும்” என்றான்

“கிளறாமல் எப்படி இருக்க முடியும் நீ உயர்ந்த சமுதாயத்தில் மேன்மையான இடத்தில் இருக்கிறாய் நீ என்னை பிரித்துப் பார்ப்பதில்லை உயிர் நண்பனாய் நினைக்கிறாய் ஆனால் உலகம் என்னையும் என் சமுதாயத்தையும் தாழ்வான இடத்தில் வைத்திருக்கிறது”என வருத்தப்பட்டான் கண்களில் கண்ணீர் வழிய “எத்தனை அவமானங்கள் மனதால் தாங்க முடியவில்லை வலிக்கிறது” என குலுங்கி குலுங்கி அழுதான்

மேலும் தொடர்ந்தான் “என் நிலை உன்னால் அறிய முடியும் ஆனால் உணர முடியாது” என விம்மி விம்மி அழுதான்

ரெண்டு வருடத்துக்கு முன்பு சாதி பிரச்சனையில் தான் என் அக்காவை வெட்டி கூறு போட்டார்கள் அந்த சமுதாயத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை அவர்களிடம் பணம் இருக்கிறது ஆட்கள் இருக்கிறார்கள் எங்களிடம் என்ன இருக்கிறது என தழுதழுத்த அவன் மனதுக்குள் அவனின் பாசமுள்ள மரித்த அக்கா நிழலாடினாள்

அவனை கட்டிப்பிடித்து அவன் தோழை தட்டிக் கொடுத்து என்னால் என்ன சொல்வது என்று தெரியாது ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தேன்

அவனின் மனவலியை உணரும் அளவிற்கு அவனின் சுவடுகளில் நான் இல்லை இந்த சமுதாயத்தின் மீது கோபமும் எரிச்சலும் தான் உண்டாயிற்று

சாதி மதங்களால் ஏற்படுகிற மிருக குணம் மனித நேயத்தையும் அன்பு சார்ந்த உணர்வுகளையும் காயப்படுத்தி கோரப்படுத்தி விடுகிறது

என் மனதுக்குள் தாங்க முடியாத துயர தொடு துக்கத்தோடு இறைவனிடம் ஒரு கேள்வி கேட்டேன் நீ எந்த சாதி எந்த மதம் என்று .

இறைவன் மொனமானான்.

Leave a Reply

Your email address will not be published.