செய்திகள்

இறந்த மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு: திடீரென உயிர் பிழைத்ததால் அதிர்ச்சி

Makkal Kural Official

நியூயார்க், ஜூன் 8–

இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்யும்போது உயிர் பிழைத்த மூதாட்டி, மீண்டும் உயிரிழந்த சோகம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் கிளாண்ட்ஸ் என்ற 74 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் (நர்சரி ஹோம்) தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரின் உறிவினர்களுக்கு நர்சரி ஹோம் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். கிளாண்ட்ஸின் உறவினர்களும் அவரது உடலைப் பெற்று, இறுதிச்சடங்குக்கு தயார் செய்தனர்.

உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சவப்பெட்டில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் உயிர் இருப்பதையும், அவர் மூச்சுவிட சிரமப்படுவதையும் கண்டு உடலை வெளியே எடுத்து முதலுதவி அளித்துள்ளனர். மேலும் மருத்துவத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்திருக்கின்றனர்.

மீண்டும் இறந்த மூதாட்டி

அங்கு விரைந்த‌ மருத்துவக் குழுவினர் கிளாண்ட்ஸை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நெப்ராஸ்கா கவுன்டி காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில், இறுதி ஊர்வலம் செய்யும் தொழிலாளர்களின் சங்க இயக்குநர் ஜெசிகா கோத் பேசுகையில், “இது முதல் முறை நடைப்பெற்ற சம்பவம் இல்லை. இறந்துவிட்டதாகக் கூறி இறுதிச் சடங்கின்போது உயிர் பிழைப்பது அடிக்கடி நடக்கிறது. கடந்த ஆண்டும் ஒரு மூதாட்டி இதே போல் இறுதிச்சடங்கில் கண் விழித்தார். உயிரிழந்ததாக அறிவிக்கும் முன்னர் நர்சிங் ஹோமில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்வதைக் கட்டாயம் ஆக்கவேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *