செய்திகள்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரூ.50 லட்சம் வங்கி மோசடி செய்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் திடீர் கைது

Makkal Kural Official

ஐதராபாத், ஆக. 6–

வங்கி மோசடியில், ரூ.50 லட்சம் கடனை செலுத்தாமல் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத் வங்கியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கிய சலபதி ராவ் என்பவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் திடீரென 2004 ஆம் ஆண்டு தளபதி ராவ் தலைமறைவானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தனது கணவர் 7 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை என்பதால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கக்கோரி அவருடைய மனைவி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு சலபதி ராவ் இறந்து விட்டதாக அறிவித்தது. இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கியவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருடைய கடன் வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கைது

இந்த நிலையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதில் ஐதராபாத்தில் இருந்து சலபதி ராவ் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்று விட்டதாகவும் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும் ஆதார் எண் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் செய்த நிலையில், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து சலபதி ராவ் மீதான வங்கி மோசடி வழக்கு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *