சிறுகதை

இரைகள்- தருமபுரி சி.சுரேஷ்

மீனா ஆசையாசையாய் தன் வீட்டின் அருகே இரண்டு வாழை மரக்கன்றை ஒரு சில மாதங்களுக்கு முன்பு நட்டு வைத்தாள்

தினந்தோறும் மாலை வேலையிலே அதற்கு தண்ணீர் பாய்ச்சுவாள்

அதில் வளரும் இலைகளை தொட்டுத் தொட்டு பார்ப்பாள் காற்றில் அந்த இலைகள் ஆடும்போது கண்களால் ரசிப்பாள்

கிழிந்த வாழை இலைகள் காற்றில் ஆடும் நடனங்களை பார்த்து மனம் குதூகலிக்கும்

அவளின் எட்டு வயது மகள் புவனா “அம்மா எப்ப இந்த வாழமரம் பழம் கொடுக்கும் “என ஆசையாய் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பான்

இவளும் ” சீக்கிரம் பழம் கொடுக்கும்” என அவள் மனதை ஒவ்வொரு நாளும் வைத்துக் கொண்டிருந்தாள்.

காற்றில் மரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவள் அதை தாங்கிப் பிடிக்கும் மரக்கட்டைகளை அதன் மீது நிறுத்தி கயிற்றால் கட்டினாள்.

எவ்வளவு காற்றடித்தும் அந்த மரங்கள் விழவில்லை உறுதியாகவே நின்றிருந்தது

வாழையடி வாழை என்பார்களே அப்படியாய் பக்கத்திலே ஒரு குருத்தும் வளர்ந்திருந்தது

“புவனா குட்டி உன்ன மாதிரியே பாரு ஒரு சின்ன குட்டி வளருவது “என்று ஆசையாய் அவளிடம் கூறினாள்

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது பூத்துக் காய் காய்க்கும் பருவத்திற்கு உள்ளாய் வந்தது; பழுக்கும் தரத்திற்கும் வந்துவிட்டது

மெதுவாய் அந்த குலையை அறுவடை செய்து வீட்டிற்குள் ஒரு பெரிய கோணிப் பைக்குள் அதை வைத்து மூடி இறுக கட்டி பழம் ஆவதற்காக காத்திருந்தார்கள்

அடுத்தநாள் அந்த மரத்தை வெட்ட வேண்டும் என நினைத்தாலும் மனம் ஒத்துழைக்காமல் கிடந்தாள்

அடுத்தடுத்த நாட்களில் மரத்தின் அருகே செல்ல

வெட்டுக்கிளிகளின் படைகள் ஆக்கிரமித்திருந்தது அது ஒரு படையாய் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை

வளர்ந்து கிடந்த அடுத்த மரத்தையும் விட்டுவைக்கவில்லை

தன் பசிக்காக வாழை மரத்தின் இலைகளை அரித்துக் கொண்டிருந்தது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பசுமை இலைகளை உண்டு வாழையின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது

மீனாவுக்கு அதை விரட்டவும் தெரியவில்லை வெட்டுக்கிளிகளை வரவேற்கவும் விருப்பமில்லை

வாழைமரம் வெட்டுக்கிளிகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தது.

தூரத்திலிருந்து மகேஷ் அந்த மரங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். அனைத்து வெட்டுக்கிளிகளையும் எப்படியோ கோணிப்பையில் நிரப்பினான்

அந்த வெட்டுக்கிளிகள் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மகேஷுக்கு இரையாகப் போகிறது என்பதை அறியாமல் கோணிப்பைக்குள் ஒவ்வொன்றும் ஓடிக் கொண்டும் பறந்துகொண்டும் இருந்தது.

பச்சைக்கிளிகள் எதையும் நாசம் செய்வது இல்லை அதனால் மகேஷ் வீட்டினுள் அதற்கு அழகு தமிழை சொல்லிக் கொடுத்து வந்தான்.

வெட்டுக்கிளிகள் பசுமைத் தாயகத்தை நாசமாக்குகிறது.

ஆகவே அதை சுவையாக வறுத்து உண்ண அதற்கான காரியங்களைச் செய்தான் தேசத்தை காப்பதில் ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டான்.

வாழை மரங்கள் வெட்டுக்கிளிக்கு இரையாயின.

வெட்டுக்கிளிகள் மகேஷுக்கு இரையாயின.

மீனா வளரும் குருத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாள்.

அவளின் மகள் ஆசையாய் முக்கனிகளில் ஒன்றான பழுத்த வாழைப்பழத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

உரு இழந்த இரண்டு வாழை மரங்கள் தன் குருத்துகளை விட்டு சென்றது அடுத்த விளைச்சல்களுக்கு

பசுமைத் தாயகத்தை காப்பதற்கு வாழையடி வாழையாக வாழை மரங்கள் பழமொழிக்கேற்ப காரியங்களை செய்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.