அறிவியல் அறிவோம்
பைக் வாங்கும் போது ஆயில் ஊற்றி தருவார்கள். வண்டி வாங்கிய ஒரு வருடம் புதுசா கல்யாணம் ஆனது மாதிரி நடந்து கொள்ளவேண்டியது, பின்பு அதை கண்டுக்காமல் விட்டுவிடவேண்டியது.
பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை வேகமாக ஓட்ட ‘என்ஜின் seize’ ஆகிவிடும். அப்படியே விழுந்தால் கை கால் எல்லாம் தேய்ந்து விடுவதுதான் மிச்சம்.
இது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. என்ஜின் ஆயில் ஒரு முக்கியமான ஒன்று என்பதை மறந்துவிடுகிறோம். அதை விட்டுவிட்டு வண்டியை நூற்றி ஐம்பது குடுத்து வாட்டர் வாஷ் மட்டும் செய்து விடுகிறோம்.
சரி எப்போதான் மாற்றவேண்டும்?கனிம அடிப்படையிலான எண்ணெயைப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் குறைந்தது ஒவ்வொரு 2,000 மைல்களிலும் அல்லது வருடத்திற்கு இரண்டு முறையாவது மாற்றப்பட வேண்டும்.
(Semi Synthetic) எண்ணெயை ஒவ்வொரு 5,000 முதல் 6,000 மைல்களுக்கும் மாற்ற வேண்டும். ரிப்ஸ் & ரைட்ஸ் படி, ஒவ்வொரு 7,000 முதல் 10,000 மைல்களுக்கும் (fully synthetic) எண்ணெய் மாற்றவேண்டும் .