வாழ்வியல்

இரும்பை காய்ச்சி அடித்து கரிமத்தின் அளவைக் குறைத்து எஃகு தயாரிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி

இரும்புக் காலத்தில் வெண்கலத்திற்கு மாற்றாக இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பினால் ஆக்கப்பட்ட கருவிகள் வலிமையுடன் இருந்தபோதும் தயாரிப்புச் செலவுகள் குறைந்திருந்தன.

பல ஐரோப்பிய – ஆசிய நாடுகளிலும் எழுத்துமொழி உருவாவதற்கு முன்னர் இதுவே இறுதி தொழில்நுட்ப மேம்பாடாக இருந்தது.

மிக உயர்ந்த வெப்பநிலை வெப்ப உலைகள் தேவைப்பட்டதால் இரும்பை பெருமளவில் தயாரிக்க இயலவில்லை. இருப்பினும் இரும்பை காய்ச்சி அடித்து கரிமத்தின் அளவைக் குறைத்து எஃகு தயாரித்தனர். செப்பு, ஈய கனிமங்களைவிட இரும்புத் தாது பரவலாக கிடைத்தது. இரும்புக் கோடாரிகளின் பயன்பாட்டினால் காடுகள் அழிக்கப்பட்டு கூடிய குடியிருப்புகள் எழலாயின. அதிகரித்து வந்த மக்கள் தொகைக்கேற்ப மிகுந்த நிலப்பரப்பு வேளாண்மைக்கு தயாராயின. ஐரோப்பாவில் பல மலைக்கோட்டைகள் கட்டப்பட்டன; இவை போர்க்காலங்களில் அடைக்கலம் வழங்கவும் சில நேரங்களில் நிரந்தர வசிப்பிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *