நல்வாழ்வுச்சிந்தனைகள்
பனை மரத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் பனை வெள்ளம் கருப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
இது சுத்திகரிக்கப்படாத சர்க்கரை என்றும் சொல்லலாம். பொதுவாக சீனி அல்லது வெள்ளை சர்க்கரையில் சல்பர் டை ஆக்சைடு, சுண்ணாம்பு மற்றும் பிற பிளீச்சிங் ஏஜெண்டுகள் போன்ற இரசாயனங்களை தயாரிப்பு செயல்முறையின் போது பயன்படுத்தப் படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கருப்பட்டி தாதுக்களை அகற்றாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
கருப்பட்டி ஊட்டச் சத்துக்களால் நிரம்பியுள்ளதோடு மட்டு மல்லாமல் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் இருமல் மற்றும் சளிக்கு எதிரான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரை அல்லது கரும்பு வெல்லத்தை விட இது மிகவும் ஆரோக்கியமானதாகும். ஆனால் அதன் பலன்களைப் பெற மிதமான அளவு உட்கொள்ள வேண்டும்.
கருப்பட்டி சுத்திகரிக்கப்படாதது மற்றும் வடிகட்டப்படாதது எனவே கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துக்களால் நிறைந்துள்ளது. கருப்பட்டியில் உடலுக்கு அவசிமான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப் படுகிறது. மேலும் இதில் வைட்டமின்களும் நிறைந் துள்ளன.
இது இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுவதாக நம்பப் படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.