வாழ்வியல்

நீர்க் கடுப்பைக் குணப்படுத்தும் முலாம் பழச்சாறு

முலாம் பழச்சாறு குடித்தால் இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் மருத்துவ பயன்கள் வருமாறு:–

முலாம்பழத்தை பழச்சாறாக்கிக் குடித்தால் கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும்.

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப் படுத்தும். வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க் கடுப்பு போன்றவை குறையும்.விதைகளின் பலன்கள்

விதைகளை பொடித்து உண்ண வயிற்றுப் புழுக்கள் மாறும். இதன் விதைகளை அரைத்து நச்சுப் பூச்சிகள் கடித்த இடத்தில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *