புதுடெல்லி, செப். 2–
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். சிங்கப்பூர்–இந்தியா ராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் வோங் பங்கேற்கிறார்.
டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். மத்திய அமைச்சர் நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல தலைவர்களுடன் வோங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் ராஜ்காட்டுக்கும் செல்கிறார். இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூர் நாட்டினரையும், இந்திய தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





