வாழ்வியல்

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பப்பாளி பழம்

செரிமான மாத்திரைகள் இந்த பப்பாளி பழத்தில் இருந்து தான் தயாரிக்க பயன்படுகிறது . பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையைக் குறைக்க பயன்படுகிறது. பப்பாளி விதையில் உள்ள ஆன்டி ஆக்சிஜன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் கரைத்துக் குறைக்கும்.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் அது கண்களில் எற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்தப் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்கலாம்.

பப்பாளி பழத்தில் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும். கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.