செய்திகள் வர்த்தகம்

இருதயத்தில் 2 வால்வு பழுதானவருக்கு ஆபரேஷன் இல்லாமல் சிறு துளையிடும் சிகிச்சை மூலம் புதிய வால்வு பொருத்தி சாதனை

சென்னை, செப். 16

சண்டிகாரை சேர்ந்த 55 வயது நபர் கனடாவில் வசித்து வருகிறார். அவருக்கு இருதயத்தில் 2 வால்வுகளில் பிரச்சினை இருந்தது. அவர் பெருநாடி வால்வு குறுகல் பிரச்சினை, இருதயத்தில் உள்ள மிட்ரல் வால்வானது இறுக்கமாக மூடாததால் ஏற்படும் ரத்தத்தின் பின்னடைவு மிட்ரல் வால்வில் கால்சியம் படிவு ஆகியவற்றின் காரணமாக கடுமையாக அவதிப்பட்டார்.

ஜெய்பூரில் உள்ள இட்டர்னல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கு இருதய நோய் நிபுணரும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மவுண்ட்சினாய், மற்றும் செயின்ட்லூயிஸ், வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில், பெருநாடி வால்வு மற்றும் மிட்ரல் வால்வு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராவ், ஒரே அமர்வில் இந்த 2 வால்வு மாற்று சிகிச்சையும் ஆபரேஷனும் செய்து முடித்தார்.

டாக்டர் ரவீந்தர் சிங் ராவ் கூறுகையில், ‘‘சிறு துளையிடும் சிகிச்சை மூலம் பெருநாடி வால்வு மாற்றப்பட்டது, மேலும் பழைய வால்வுக்குள் ஒருபுதிய வால்வு வைக்கப்பட்டது. புதிய வால்வு உடனடியாக செயல்படத் தொடங்கியது. அதில் எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படவில்லை. மிட்ரல் வால்வை மாற்றுவது என்பது மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும். காலில் காணப்படும் நரம்பிலிருந்து புதிய வால்வு வைக்கப்பட்டது. அந்த வால்வு விரைவாக பொருத்தப்பட்ட உடன் அதைத் தொடர்ந்து இரண்டு வால்வுகளும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் செயல்படத் தொடங்கின. இந்த சிகிச்சைக்கு பின் நோயாளி ஒரு நாள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விரைவாக குணமடையத் தொடங்கினார்’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *