செய்திகள்

இருதயத்தில் வால்வு பாதிப்பு, தடுப்பு தசை, ரத்தக்குழாய் இல்லாத 3 மாத குழந்தைக்கு மியாட் மருத்துவமனையில் அபூர்வ ஆபரேஷன்

சென்னை, செப் 12–

இருதயத்தில் வால்வு பாதிப்பு, தடுப்பு தசை, ரத்தக்குழாய் இல்லாத 3 மாத குழந்தைக்கு மியாட் மருத்துவமனையில் அபூர்வ ஆபரேஷன், சென்னை மியாட் மருத்துவமனையில் நிபுணர் டாக்டர் ராபர்ட் கோஎல்கோ சாதனை படைத்துள்ளார்.

செஷல்ஸ் நாட்டில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது 10 வயது மகன் ஆஞ்சலோ அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் அவனது தாய், ரிவானா என்னும் 3 மாத பச்சிளம் குழந்தையை பார்த்தார். அக்குழந்தைக்கு ட்ரூன்கஸ் ஆர்டீரியோசஸ் என்னும் அரிதான இருதய நோய் இருப்பதும் அதன் காரணமாக அக்குழந்தைக்கு பால் ஊட்டுவது பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இருவருக்கும் அபூர்வ ஆபரேஷனை டாக்டர் ராபர்ட் கோலெ்கோ வெற்றிகரமாக செய்தார். பெற்றோர்கள் மருத்துவமனை சேர்மன் மல்லிகாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

செஷல்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரிவானா என்ற குழந்தையை பரிசோதனை செய்தபோது, அதன் இருதயத்தில் அசாதாரணமான துடிப்புகள் கண்டறியப்பட்டன. ஸ்கேன் செய்ததில் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறான உயிருக்கு பல்வேறு ஆபத்தான பிரச்சனைகள் இருப்பதும் அதற்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பதும் தெரியவந்தது. இத்தகைய குழந்தையியல் இருதய சிகிச்சை கையாளும் திறன்கொண்ட மருத்துவமனைகள் செஷல்ஸ் நாட்டில் இல்லை. அவர்களை காக்க செஷல்ஸ் அரசு முன் வந்தது. சிறுவனின் இருதய நிலை மோசமடைய, அவனது உயிரை காக்க சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவனது மருத்துவர்கள் தெரிவித்தனர். மோசமான உடல்நிலை காரணமாக ரிவானா வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில் மருத்துவரின் தொடர் கண்காணிப்புடன் செஷல்ஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் மியாட் வந்து சேர்ந்தனர்.

டாக்டர் ராபர்ட் கோஎல்கோ

சென்னை, மியாட் இண்டர்நேஷனலில், ரிவானாவை, குழந்தையியல் அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குனரும் தலைவருமான டாக்டர் ராபர்ட் கோயெல்லோ பரிசோதனை செய்தார்.

ரிவானாவிற்கு இருதயத்தில் 2 நாளங்களுக்கு பதிலான ஒரு ரத்தநாளம் மட்டுமே இருந்தது. மேலும் இந்நிலையை சிக்கலாக்கும் வகையில் அவளது இடது மற்றும் வலது வென்ட்ரிக்கில்கள் ஒரு சுவர் கொண்டு பிரிக்கப்பட்டவும் இல்லை. இதன் காரணமாக ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட சுத்த ரத்தம், ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட கழிவு ரத்தத்துடன் கலந்து மற்றும் அத்தகை கலவையான ரத்தத்தை ஒற்றை ரத்த நாளம் உடன் முழுவதும் வினியோகம் செய்து வந்தது. மேலும் மற்றொரு பிரச்சனையாக ட்ரீனகல் வால்வும் கசிந்தது. இருதயத்தில் அழுத்தத்திறனை வெகுவாக பாதித்து. இது குழந்தையின் ஆற்றல் அளவுகளை வெகுவாகக் குறைத்ததன் காரணமாக குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. குழந்தைகள் பால் ஊட்டுவதும் சிரமமானதாக இருந்தது.

இந்நிலையில் குழந்தையியல் அறுவை சிகிச்சை நிபுணர் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைத்தார். எனவே குழந்தையின் இருதய சிக்கல்களை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 தனிப்பட்ட சிக்கல்களை சரிசெய்யும் வகையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின் ரிவானா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவர் தொடர்ந்து 20 நாட்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் வெளி ஆதரவு இன்றி அவர் மீண்டும் சுவாசிக்கத் துவங்க அதிகப்படியான காலமானது.

இன்று ரிவானா ஒரு வழக்கமான வாழ்வை வாழ தயாராகியுள்ளாள். அவள் மிகவும் நிலையாகவும் சவுகரியமாகவும் இருக்கிறாள். அவளால் நன்றாக சுவாசிக்கவும் பால் அருந்தவும் முடிகிறது.

எனது மருமகளின் வாழ்வை மியாட் காப்பாற்றியுள்ளது. அதற்காக நான் எப்போதும் மியாட்டிற்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்’ என்று கூறினார்.

அச்சிறுவனுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவனும் ரிவானாவுடன் மகிழ்ச்சியாக உள்ளான். இருவரையும் ஒன்றாகப் பார்த்து அவனது தாய் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மியாட் இண்டர்நேஷனலைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ரிவானாவிற்கு பிரியாவிடை கொடுக்க தயாராகி வருகிறோம். எங்களிடம் தாய்ப்பால் அருந்த முடியாத, மிகவும் நலவுற்ற உடல்நிலையைக் கொண்ட குழந்தையாக அவள் வந்து சேர்ந்தாள். ஆனால் தற்போது அவள் மீண்டும் ஒரு சிறப்பான குழந்தை பருவத்தை வாழும் வகையில் தனது தாயின் நம்பிக்கைத் தூணாகத் திகழும் வகையில் செஷல்சிற்கு செல்லஉள்ளாள் என்று சேர்மன் மல்லிகா மோகன் தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *