செய்திகள்

இரவுநேர கேளிக்கை விடுதி விபத்து: பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு

Makkal Kural Official

சான்டோ டோமினிக்கோ, ஏப். 10–

டொமினிகன் ரிபப்ளிக்கில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ள.

கரீபியன் தீவு நாடான டொமினிகன் ரிபப்ளிக் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 முதல் 1,000 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது

பலி 124 ஆக உயர்வு

இந்த இசைநிகழ்ச்சி நேற்று அதிகாலை வரை நீடித்தது. அப்போது, இசைநிகழ்ச்சி நடைபெற்ற கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 66 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 160 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பலர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ள.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *