வாழ்வியல்

இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் உணவுகள் !

சத்தான உணவு முறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தினைப் பெற மற்றுமொரு திறவு கோலாக விளங்குகிறது. உணவுகளில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்தினைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கொழுப்பு (அல்லது) கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.வழக்கமான நாள் என்பது மூன்று முழு உணவுடனும் இரண்டு அல்லது மூன்று சிற்றுண்டிகளுடனும் இருக்க வேண்டும்.நாம் உண்ணும் உணவானது நிறமுடையதாகவும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுடனும் குறைந்த புரதச்சத்துடனும் உணவை நிறைவு செய்ய வேண்டும்.

கொட்டைகள், விதைகள், புதிய பழங்களைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்து அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த பொருட்களை உண்பதே ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். உணவில் சோடியம் உப்பு மற்றும் செயற்கையான முறையில் வெண்மையாக்கப் பட்ட‌ சர்க்கரை (Refined Sugar) போன்றவை உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.கொழுப்புகள் அடங்கியுள்ள இறைச்சி உணவினை அறவே தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *