நல்வாழ்வு
உலர் திராட்சை கருப்பு திராட்சை பழங்களை வெயிலில் அல்லது உலர்த்தியில் உலர்த்துவதன் மூலம் உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது. இது சில இடங்களில் கிஸ்மிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இவை உணவுகளின் சுவையை அதிகரிக்க குக்கீகள், கேக்குகள் அல்லது கீர், அல்வா மற்றும் பர்ஃபிகளில் பயன்படுத்தப்படுகிறது.
உலர் கருப்பு திராட்சை பழங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள பல இயற்கை கூறுகள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அவை இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அதிக அளவு இரும்புச்சத்தை கொண்டுள்ளன.
முடி உதிர்வதைத் தடுப்பது, இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்குவது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இரத்த சோகையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற தினமும் சாப்பிடுவது நல்லது. உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் :–
மொத்த கலோரிகள் : 408 ,பொட்டாசியம் : 1284 மி.கி ,
புரதங்கள் : 5.9 கிராம், வைட்டமின் ஏ : 2.1%,
நார்ச்சத்து : 9.8 கிராம் ,மொத்த கார்போஹைட்ரேட்டுகள் : 107 கிராம், கால்சியம் : 9.5 %, இரும்பு : 26 % ,சோடியம் : 12 மி.கி, வைட்டமின் சி : 11%