சிறுகதை

இரண்டு மனிதர்கள் – திருச்சிற்றம்பலம் சுரேஷ்

கார்த்திகா… கார்த்திகா….?

என்னக்கா வேண்டும்.? ஊருக்கு போன அம்மாதான் ஃபோன் செய்கிறார்கள்.அதை எடுக்க கூடாதா.?

ஏன் ! நீ எடுக்க கூடாதா.?

இதில் ஒன்றும் …நக்கல் நையாண்டிக்கு குறை இல்லை.

சொல்லுங்க …அம்மா.?. ஊருக்கு நலமாக சென்றீர்களா? அங்கு மாமா.அத்தை தங்கை ஜெயலட்சுமி ஆகியவர்கள் நலம் தானே.?

இங்கு அனைவரும்..நலம். வேலையில் இருந்து அப்பா வந்துவிட்டாரா? இங்கு இரண்டு நாள் தங்கிட்டு வரலாம் இருக்கிறேன்.

தாரளமாக…தங்கிட்டு வாங்கம்மா.

நம்ம… ஊர் பற்றி கூற ஏதாவது தகவல் உண்டா?

மறந்தே போய் விட்டேன்.இன்று நம்ம ஊரில் இரண்டு மரணம் நிகழ்ந்தது.

என்னடி சொல்ற …. ? யார் இறந்தார்கள்!?

நம்ம தெரு லட்சுமி மருமகன் வீட்டிலேயே.. தற்கொலை செய்துக்கொண்டார்.

என்னடி சொல்ற?

கணவன்..மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடக்கும்.இந்த சண்டை..அவனை மரணம் அடைய வைத்துள்ளது.

இன்றைய.. பிள்ளைகள் எப்ப பெற்றோர் பேச்சை கேட்கிறார்கள். காதலித்தவனைதான் கல்யாணம் செய்துக் கொள்வேன் அடம்பிடித்து கல்யாணம் செய்துக் கொண்டு தினமும் கணவனோடு சண்டை போடுவது. அவ பெற்றோர்..

.”அவன் பயங்கர குடிகாரன். அவனை எல்லாம் உன்னால் திருத்த முடியாது. வேண்டாம். இந்தக் காதல் கல்யாணம் என்று அப்பாவும்…அம்மாவும் கிளிக்கு சொல்வது போல்… சொன்னார்கள்.

கட்டிக் கொண்டால் அவரைதான் கட்டிக்கொள்வேன். இல்லையென்றால் தற்கொலை முயற்சி செய்வேன் மிரட்டி

குடிகாரனை கல்யாணம் செய்துக் கொண்டு…இன்று வயிற்றில் பிள்ளையோடு…

விதவையாக இருப்பது கேட்கவே கஷ்டமாக உள்ளது. அந்தக் குடிகாரன்.. தன் வாரிசை சுமந்து இருக்கும் நிலையில் அவன் தற்கொலை செய்தது மண்ணிக்க முடியாத குற்றம்.

இன்னொரு மரணம் யார் உடையது!?

நம்ம.. வீட்டுக்கு அடிக்கடி வரும் ..கவிதா உடைய கணவர் மரணம்.

அவ.. ரொம்ப நாளாக எதிர் பார்த்தாள் கணவரின் மரணத்தை.

ரொம்ப வைராக்கிய கணவன்–.மனைவி தம்பதி.

கணவன்.. மனைவி சண்டை என்றால் ‘ஒரு நாள் இரண்டு நாள் பேசாமல் இருப்பார்கள்.இவ பத்து வருடமாக கணவரிடம் பேசாமல் வாழ்ந்து வருகிறாள்.

ஏதோ..ஒரு சண்டையில்’அவரு இந்த பெண்ணிடம் உனக்கு நான் வேண்டும்மா? நான் தரும் சொத்து வேண்டுமா..?கேட்டு இருக்கிறார்.

இவ என்ன கேட்டார்கள் என்றால்

“எனக்கு நீ வேண்டாம். நீ தரும் சொத்து போதும் என்று கூறி.வசிக்க வீட்டையும்… ஐந்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிக் கொண்டு…கணவரிடம் பேசுவதையே…நிறுத்திய புண்ணியவதி அவள்.

நிறைய வீடுகளில் இது நடப்பது உண்டு.ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கணவன்.. மனைவி பேசுவது இல்லை.கூட பிறந்த அண்ணன்…தம்பி பேசுவது இல்லை.அப்பா..மகன் பேசுவது இல்லை.

இப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

என்ன இருந்தாலும்…!கணவனை.. மனைவியும் மனைவியைக் கணவன் அக்கறையாக கவனிப்பது உலகில் வேறு உறவுகள் இல்லை.

கண்டிப்பா.அம்மா.! இரண்டு மரணத்தை நினைத்து கவலை படாமல். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வாருங்கள்.

முயற்சி செய்கிறேன்.

அது.. எல்லாம் முயற்சி செயயவேண்டாம்.இருந்து விட்டு வாருங்கள்.அந்த மனிதர்கள் மரணத்தை நினைக்காமல்.

Leave a Reply

Your email address will not be published.