தேசிய மாணவர் படை பயிற்சியாளருக்கு பாராட்டு
பாட்னா, ஜன. 25–
இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால் எடுத்து சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டை 2,500 தண்டால்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், முகேஷ் குமார் தற்போது அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனையை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.