செய்திகள்

‘இரட்டை ரோஜா’: ஜீ டிவியில் மெகா தொடர் இன்று ஆரம்பம்

சென்னை, ஆக.12

‘இரட்டை ரோஜா’ ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகி இருக்கும் புதிய மெகா தொடர். ஏ. எஸ். நாராயணன் தயாரிக்க ‘பூவே பூச்சூடவா’ தொடரின் இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார். வசனகர்த்தா சரவணன்.

மின்கம்பம் ஏறும் தொழிலாளர் கந்தசாமிக்கு பிறந்த இரட்டைகுழந்தைகள் அனு, அபி 2 நிமிட இடைவெளியில் அக்கா ஆகிவிட்ட அனுவுக்கு சிறு வயதில் இருந்தே தங்கை அபி மீது தீராத வெறுப்பு. ஆனால் எதுவாக இருந்தாலும் அக்காவுக்காக விட்டுக்கொடுக்கும் பாசமான தங்கை அபி. இருவரும் வளர வளர இந்த வெறுப்பு, பாசமும் அதிகமாகிறது.

தான் மகாராணியாக வாழ வேண்டும்; தனக்குக் கால் பிடிக்கும் சேவகியாக அபி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள் அனு. அதனால் ஒரு பணக்கார பையன் உடனான அபியின் காதலுக்கு இடையூராக இருக்கிறாள்.

அவர்கள் இருவரது திருமண வாழ்க்கை எப்படி அமைகின்றது? அபியை நடுத்தெருவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அனுவின் ஆணவம் ஜெயித்ததா? தனக்கு எது வந்தாலும் அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்ற அபியின் பாசம் ஜெயித்ததா? இதுவே இரட்டை ரோஜாவின் கதைச்சுருக்கம்.

அக்கா தங்கை என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஷிவானி. சபிதா ஆனந்த், பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *