செய்திகள்

‘இயேசு அழைக்கிறார்’ நிறுவனர் பால் தினகரன் இல்லத்திருமண விழா

கோவை, ஜன. 12

காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன் மகன் சாமுவேல் பால் தினகரன் ஷில்பா ஷேரன் திருமண வரவேற்பு விழாவில் புதுமண தம்பதியினர் புயல் நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர்.

இயேசு அழைக்கிறார் சீஷா தொண்டு நிறுவன நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் தம்பதியினரின் மூத்த மகன் சாமுவேல் பால் தினகரனுக்கும், திருநெல்வேலி பிரபல மருத்துவர்கள் ராஜ்குமார் ஞானமுத்து, சகுந்தலா தம்பதியினரின் மகள் ஷில்பா ஷேரனிற்கும், பாளையங்கோட்டை தூய திருத்துவ பேராலயத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்தை பேராயர் நடத்தி வைத்தார். புது மண தம்பதிகளை பேராயர்களும், போதகர்களும் வாழ்த்தி ஆசி வழங்கினர்.

பின்னர் பாளை தூய யோவான் கல்லூரி மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. புதுமண தம்பதியர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

ரூ.1 லட்சம் புயல் நிவாரணம்

தொடர்ந்து, கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 100 வீடுகள் கட்டிக் கொடுக்கும் நிவாரணப் பணிகளை அறிந்து 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர். புதுமண தம்பதியினரின் இந்த சமுதாய பணியை அனைவரும் பாராட்டினர்.

விழாவில், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலில் பால் தினகரன், ஷேரன் பால் தினகரன், ஸ்வீட்டி பால் தினகரன், வட இந்திய திருச்சபையின் பிரதம பேராயர் டாக்டர் பி.சி.சிங், ராஞ்சி திருமண்டல பேராயர் பி.பி.பாஸ்கே, குஜராத் திருமண்டல பேராயர் சில்வான்ஸ் கிறிஸ்டியன், தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் தாமஸ் கே.உம்மன், துணை பிரதமர் வி.பிரசாத் ராவ், மதுரை திருமண்டல பேராயர் எம்.ஜோசப், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி. தேவசகாயம், திருச்சி திருமண்டல பேராயர் சந்திரசேகரன், கொல்லம் திருமண்டல பேராயர் உம்மன் ஜார்ஜ், சென்னை திருமண்டல முன்னாள் பேராயர் தேவசகாயம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்பி விஜிலா சத்யானந்த், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *