வாழ்வியல்

இயற்கை மருத்துவம் – யோகாவில் உள்ள படிப்புகள்

இயற்கை மருத்துவம் – யோகாவில் உள்ள படிப்புகள் பி. என். ஒய்.ஐ. எஸ் (BNYS)

இது 5 ½ ஆண்டுகள் பயிற்சி காலமாகும். இக்காலத்தில் யோகா, இயற்கை மருத்துவ கல்வியுடன் மட்டுமல்லாது மருத்துவராக செயலாற்றிட மருத்துவ மனையை திறப்பட நிர்வகிக்க கற்றுத் தரப்படுகிறது.

இக்கல்லூரிகளில் பயிற்சிகள் மூலமாகவும் செய்முறை மூலமாகவும் சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும் கற்றுத் தரப்படுகிறது.

இந்த வகுப்புகளில் எந்த முறையிலும் மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் கற்றுத்தரப்படுகிறது. வளர்ந்த மருத்துவ கல்லூரிகள் யோகாவின் பயனை நிரூபித்திட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். மனிதர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை வளர்க்கும் விதமாக பல்கலைக் கழகங்கள் ஒரு வருட யோகா ஆசிரியர் பயிற்சியை அளிக்கின்றனர்.

மொத்தமாக 18 பல்கலைக் கழகங்கள் பட்டயம், சான்றிதழ் கல்வி, டிப்ள்மோ ஆகியவற்றினை யோகா கல்விக்கு அளிக்கிறார்கள். யோகாவினை மேம்படுத்திடவும் பரப்பவும் அதிக பயிற்சிகளை அளிக்க பல்கலைக் கழகங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.

சில பல்கலைக் கழகங்கள் சான்றிதழ் கல்வி முதல் ஆய்வு கல்வி வரை கற்றுத் தரப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பல்கலைக் கழங்களில் யோகா, இயற்கை மருத்துவத்திற்கான தனித் துறைகள் துவங்கப்பட உள்ளது.

வெளி நாடுகளில் யோகா- இயற்கை மருத்துவம் பிரபலமாகி உள்ளது. அதே சமயம் அங்கு ஆய்வுகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவில் சில மாநிலங்களில் கல்வித் துறையும் யோகா மருத்துவ இயற்கை மருத்துவத்தினை இணைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டில்லி முன்சிபல் கார்ப்பரேசன் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏறத்தாழ 1000 யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றும் பல நாடுகளில் மனப் பிரச்சனைகளை தீர்த்திட யோகாவினை கடைப்பிடித்து வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, லண்டன் நாடுகளில் அங்கீகாரத்துடன் ஏராளமான கல்லூரிகள் இதற்கென இயங்கிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *