செய்திகள்

இயற்கை, செயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம்

Spread the love

திருவள்ளூர், நவ. 10

பூவிருந்தவல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியில் இயற்கை, செயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய விபத்துகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது :

முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்படக்கூடிய பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பேரிடர் ஏற்படும் காலங்களில் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், அதை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் காலங்களில் என்னென்ன, இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகள வரும்பொழுது ஒவ்வொரு நபரும் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பது குறித்து, அதாவது செயற்கை இடர்பாடு என்பது சாலை விபத்து மற்றும் தீவிபத்து, இயற்கை இடர்பாடு என்பது வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில் எப்படி முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். வந்தபிறகுகும் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு தனிமனிதரும் உடனடியாக விழிப்புணர்வு பெற்றிருந்தால் மட்டுமே உயிர்சேதம் இல்லாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குட்டி போலிஸ், சுய உதவி குழுக்கள், எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ். பணியாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீஞ்சூர், பழவேற்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3500 இளைஞர்களுக்கு, கடலோர பகுதியில் வாழும் மீனவ சமுதாய மக்கள் வெள்ளளம் ஏற்படும்பொழுது எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஐ.ஜி. என்.பாஸ்கரன், திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்சி முகமை க.லோகநாயகி, திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வை.ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், இயக்குநர் பேரிடர் மேலாண்மை மையம் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஜி.ஈ.கணபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *