செய்திகள்

இமாச்சல் மலையேற்றம்: 3 பேர் பலி; 10 பேர் மீட்பு

சிம்லா, அக். 25–

இமாச்சல் பிரதேச மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 3 சுற்றுலா பயணிகள் பலியாகி இருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் இமாச்சல் பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தீபக் நாராயண் (வயது 58), ராஜேந்தர் பதக் (வயது 65), அசோக் மதுக்கர் (வயது 64) என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கின்னூர் போலீஸ் கமிஷ்னர் அபூர்வா தேவ்கன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *