சிம்லா, ஆக. 24–
இமாச்சல் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், குலு – மண்டி சாலையில் சுமார் 10 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குலு பகுதியில் இருந்து மண்டி பகுதிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் அங்கு பல கிமீ தூரத்துக்கு வாகங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், உண்பதற்குக் கூட தங்களிடம் எதுவுமில்லை, சாலையை சீரமைத்து விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
குலு எஸ்.பி சாக்ஷி வர்மா கூறுகையில், கனமழை காரணமாக குலு – மண்டிக்குச் செல்லும் இரண்டு சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று வழிச் சாலையும் போக்குவரத்துக்கான சூழ்நிலை இல்லை. பொதுப்பணித்துறையினர் நிலைமையை சரிசெய்யும் முயற்சியில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.