வாழ்வியல்

இமய மலைத்தொடரையும் உருக்கும் வெப்பமயமாதல்!

பூமி வெப்பமயமாதல், துருவப் பகுதிகளை மட்டுமல்ல, இமயமலைத் தொடரையும் உருக்கி வருகிறது.

தற்போது உள்ளபடியே, வளிமண்டல வெப்பம் தொடர்ந்தால், அடுத்த 80 ஆண்டுகளில், இமயமலையை போர்த்தியிருக்கும் பனி படலத்தில், 36 சதவீதம் உருகி, பள்ளத்தாக்குகளை நோக்கி நீராய் ஓடிவிடும் என, வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

உலகில் உள்ள மொத்த பனிப் பாறைகளில், மூன்றில் ஒரு பங்கு, இமாலய பகுதியில் தான் உள்ளன.

இந்தியா உட்பட பல நாடுகளைக் கொண்ட வல்லுனர் குழு, அண்மையில் ‘ஹிந்து குஷ்-ஹிமாலய மலைத்தொடர் மதிப்பீடு’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், தொழில்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து, 1.5 டிகிரி செல்ஷியஸ் உயர் வெப்பநிலையை தக்கவைத்துக் கொண்டாலே, இமய மலையின் பனிப் பாறைகளில் கணிசமானவை உருகிவிடும் என, கவலை தெரிவித்து உள்ளது.

இதனால், அப்பகுதியில் வாழும், 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட, சுற்றுச்சூழல் சார்ந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *