சென்னை, மே 5–
இன்று வணிகர் தினம். இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, ஜவுளி மற்றும் நகைக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழகம் முழுவதும் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியும்வெறிச்சோடி காணப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்
ஆண்டு தோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வணிகர் சங்கங்கள் மாநாடுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மாலை நடக்கிறது. பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி
இதேபோல், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மறைமலைநகரில் இன்று நடக்கிறது. கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதேபோல், பல்வேறு வணிகர் சங்கங்கள் சார்பிலும் வணிகர் தின மாநாடுகள் நடக்கின்றன.
![]()





