செய்திகள்

இன்று பட்ஜெட் தாக்கல்: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு

மும்பை, பிப். 1–

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்ந்து 60,007 புள்ளிகளாக காணப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மோடி அரசாங்கத்தின் இரண்டாவது 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

அதன்படி இந்தியப் பொருளாதாரம் எதிர்வரும் 2023-–24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி காணும். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்து. இதனால் நேற்றைய வர்த்தம் நேர்மறையாக முடிவுற்றிருந்த நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி இருக்கின்றன. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை உயர்ந்து 60,007 புள்ளிகளாக இருந்தது.

இதில், வங்கி துறையானது லாபத்துடன் தொடங்கியது. இதன்படி, எஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் தொடங்கின. எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் கோடக் வங்கி ஆகியவையும் பங்கு வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் கூடுலான லாபத்துடன் காணப்பட்டன. கோல் இந்தியா, பவர் கிரிக் கார்ப்பரேசன் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. எனினும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 130 புள்ளிகள் வரை உயர்ந்து 17,792 புள்ளிகளாக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து ரூ.81.77 ஆக உள்ளது. இது நேற்று ரூ.81.92 என முடிவடைந்த மதிப்புடன் ஒப்பிடும்போது 0.18% அதிகம் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *