செய்திகள்

இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Makkal Kural Official

சென்னை, ஏப். 20–

இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகளில் ஈஸ்டரும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் 3வது நாளில் உயிர்த்தெழுத்தார் என்று பைபிள் கூறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகையின் ஒருபகுதியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக காட்டப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்ச்சியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகள் மின்னொளியில் ஜொலித்தன. தமிழகத்தில் சென்னை, நாகை, கோவை உள்பட பல மாவட்டங்களில் ஈஸ்டர் பண்டிகை களைகட்டியது. குறிப்பாக தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். நாகை வேளாங்கண்ணி சர்ச்சில் நேற்று இரவு 1.45 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்தில நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். அதன்பிறகு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரா்த்தனை நடந்தது. இயேசு உயியர்தெழும் நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *