செய்திகள்

இன்று இந்தியா வருகிறது ஸ்புட்னிக்

டெல்லி, மே 1–

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக்–வி

ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான ஸ்புட்னிக் தடுப்பூசியை, இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும் ரெட்டிஸ் நிறுவனம் முடித்துவிட்டது.

ஆனாலும் அண்மையில் தான், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவரசத் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் ஸ்புட்னிஸ்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. மே மாதத் தொடக்கத்திலிருந்தே இந்திய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *