செய்திகள்

இன்றும் நாளையும் 33 சதவீத பணியாளர்களுடன் வங்கிகள் செயல்படும்

சென்னை, ஜூன் 29–

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வங்கி சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 33 சதவீத பணியாளர்களோடு இன்றும் நாளையும் 2 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதன்படி இன்றும், நாளையும் வங்கிகள் குறைவான பணியாளர்களோடு செயல்பட உள்ளன. 10 நாட்களுக்கு பின்னர் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *