செய்திகள்

இன்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ரொக்கம் இல்லாமல் டிஜிட்டலில் செலுத்தலாம்: இந்தியன் ஆயில் ஏற்பாடு

சென்னை, ஜூன். 29–

வீடுகளுக்கு இந்தியன் ஆயில் ‘இன்டேன்’ கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது, ரொக்கம் வழங்குவதை தடுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இந்தியன் ஆயில் ஒன்’ மொபைல் செயலி பதிவிறக்கம் செய்து, கியாஸ் பதிவு செய்யும் போது, அதற்கான தொகையை ‘பே டி எம்’ அமேசான் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர் கொண்டு வரும் கையடக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி மூலம் ரொக்கம் செலுத்தாமல், கிரெடிட் கார்டு டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இது தவிர கூகுள் பே, ‘பே டி எம்’ அமேசான், பீம், யுபிஐ மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

ரொக்கமாக பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் வீட்டில் டெலிவரியான பிறகு, இந்தியன் ஆயில் வலை தளத்தில் கியாஸ் டெலிவரி திருப்தி பற்றி தகவல் அளிக்கலாம்.

இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு எல்லா வேலை நாளிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னைக்கு 044–24339236 / 24339246 என்ற எண்ணிலும், அவசர தகவலுக்கு 1906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைனில் பணம் செலுத்த, கியாஸ் சிலிண்டர் புக்கிங் செய்தவுடன் ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பு தகவல் வரும். அதை ஒரு நாளுக்குள் ‘கிளிக்’ செய்து பல்வேறு முறையில் செலுத்தலாம். நெட் பாங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு, இ–வாலட் மூலம் செலுத்தி விடுவதால், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *