செய்திகள்

இனப்பாகுபாடு கொடுமை அனுபவித்தேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தகவல்

லண்டன், பிப். 05–

இங்கிலாந்தின் இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் தன்னுடைய சிறுவயதில் இன பாகுபாட்டை சந்தித்துள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக். இவர் பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்த இவரின் குடும்பத்தினர் 1960 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரிஷியின் அப்பா ஒரு இந்தியராவார். ஆனால், ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவராவார். இவர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தாலும், இந்திய கலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர்.

பாகுபாடு அனுபவித்தேன்

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிஷி சுனக், அவருடைய சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட இனப்பாகுபாடு குறித்து கூறியுள்ளார். ரிஷி மற்றும் அவரின் தம்பி, தங்கைகள் பேசும்போது அவர்கள் பேச்சில் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதில் அவர் அம்மா கவனமாக இருப்பாராம். அதற்காக அவர்களை சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பிபுயுள்ளராம்.

‘நீங்கள் வேறு ஒருவராக இருப்பதை உணர்வீர்கள். அது ரொம்ப கஷ்டமா இருக்கும். வெளிப்படையா சொல்லனும்னா நா சின்ன வயசுல இனவெறுப்ப சந்திச்சுறுக்கேன். என்னுடைய அந்த நிலை தற்போது என்னுடைய பிள்ளைகளுக்கு இல்லை. மேலும் என் பெற்றோர் எங்களை எல்லா வகையிலும் இந்திய கலாச்சாரத்திலேயே வளர்த்தனர். எந்தவித இனவெறியும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மேலும் நான் பிரிட்டனின் பிரதமர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை’ என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இதுவரை இனரீதியாக சிறுபான்மை சமூகத்தை சார்ந்த எவரும் பிரிட்டனில் பிரதமராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *