செய்திகள்

‘‘இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்:” ‘ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன்

Makkal Kural Official

சென்னை, ஜன. 4:

இந்த பொங்கல் அண்ணன் – தம்பி பொங்கல் என்று ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “படம் தொடங்கும்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் “அக்டோபர் மாதமா, டிசம்பர் மாதமானு ரிலீஸ் டேட் பற்றி பேசிட்டு இருந்தோம். அக்டோபர்ல விஜய் சார் படம் வருவதாக இருந்தது. அப்போதே பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ்னு சொன்னாரு.

அப்புறம் விஜய் சாரோட படம் பொங்கல் ரிலீஸ்னு அறிவிச்சாங்க. நான் கால் பண்ணி ‘என்ன ப்ரோ, விஜய் சார் படம் வருது. டேட் மாத்தலாமா?’னு கேட்டேன். ‘இல்ல ஏப்ரல் மாசத்துல தேர்தல் வந்துரும். ப்ரொடக்ஷன், டிஸ்ட்ரிபியூஷன்னு எல்லாரும் காசு போட்டுருக்காங்க, மாத்த முடியாது என்றார்.

நான் உடனே ஜகதீஷ் ப்ரோக்கு (விஜய்யின் மேலாளர்) கால் பண்ணி கேட்டேன். அவரு ‘ஆமாம்’னு சொன்னாரு. ‘ஓகே நான் அப்ப ரிலீஸ் பண்ணல’னு சொன்னேன். ‘இதுல என்ன ப்ரோ இருக்கு?’னு சொன்னாரு.

‘இல்ல ப்ரோ, சாரோட கடைசி படம் அவருக்கு ஓகேவானு கேளுங்க’னு சொன்னேன். ஒரு 5 நிமிஷத்தில் திரும்ப லைனுக்கு வந்தாரு. ‘உங்களுக்கு விஜய் சார் விஷஸ் சொல்ல சொன்னாரு’னு என்றார். அவ்வளவுதான் இதுக்குள்ள நடந்த விஷயம். சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம்!

ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை கொண்டாடுங்க. 33 வருஷம் நம்மை எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் கொண்டாடனும். ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!

காலேஜ் படிக்கும்போது அப்பா இறந்தாரு. பாக்ஸ்ல அப்பா உடம்ப வச்சிட்டு அம்மா அழுதாங்க. ‘தம்பிய பாருங்க, பாதில விட்டு போய்ட்டீங்களே, இவனுக்கு யாரு இருக்கான்?’னு அழுதாங்க. அப்போ, என்னடா நம்ம செய்யப் போறோம்னுதான் மண்டைல ஓடுச்சு. அப்போ நமக்கு தெரிஞ்சது மிமிக்ரி ஒன்னுதான். அதை பண்ணினேன். சிட்டி சென்டர் மால்ல போய் உட்கார்ந்து, யாருக்காச்சும் நம்மள தெரியுதானு பாத்தேன். 2 பசங்க வந்து ஆட்டோகிராப் கேட்டாங்க. அன்னைக்கு நான் நைட் தூங்கல. அப்புறம் படம் வாய்ப்பு கிடைச்சது. என்னை தட்டி விட 1000 பேர் இருந்தாலும், தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்காங்க!

நம்ம நல்லா இருக்கணும்னு நினைச்சு நம்மள விமர்சனம் பண்றவங்கள சீரியசா எடுத்துக்கோங்க. நம்ம நல்லவே இருக்க கூடாதுனு நினைச்சு விமர்சனம் பண்றவங்கள ஜோகாவே எடுத்துக்கோங்க.

தாய் நாட்டுக்காக ஒரு படம் பண்ணேன், அது ‘அமரன்’. தாய் மொழிக்காக ஒரு படம் பண்ணிருக்கேன், அது ‘பராசக்தி’.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *