செய்திகள்

இந்திரா காந்தியே என் பலம்: நினைவு நாளில் ராகுல் பதிவு

டெல்லி, அக். 31–

நீங்கள்தான் என் பலம் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீங்களே என் பலம்

டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–

‘என் பாட்டி (இந்திரா காந்தி) தான் என் பலம். நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்த இந்தியாவை, நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடன் என் இதயத்தில் இருக்கின்றன’ என்று டுவிட்டரில் பதிவிட்டு அவர் குறித்த ஒரு விடியோவையும் அதில் பகிர்ந்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *