செய்திகள்

இந்திய ரெயில்வே துறைக்கு 5 ஜி அலைவரிசை

மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜூன்.10-

இந்திய ரெயில்வே துறைக்கு 5 ஜி அலைவரிசை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டிலான இத்திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெயில் நிலையங்கள், ரெயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டுற்காக ரெயில்வே துறையில் 5ஜி அலைவரிசை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

ரெயில்வே துறையில் 5 ஜி அலைவரிசை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெயில்வேயில் தொலைதொடர்பு அமைப்பு மேம்படுவதுடன், ரெயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் ரெயில் மோதல்களைத் தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

தற்போது ரெயில்வே ஆப்டிக்கள் பைபரை பயன்படுத்துகிறது. 5 ஜி அலைவரிசை கிடைப்பதன் மூலம், ரேடியோ தொலைதொடர்பு வசதி ரெயில்வேக்கு கிடைக்கும்.

ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *