வர்த்தகம்

இந்திய மொழிகளில் கருத்து தெரிவிக்க உதவும் ‘கூ’ செயலி விரிவாக்கத்துக்கு ரூ.30 கோடி முதலீடு

சென்னை, பிப்.21

‘கூ’ (KOO) என்பது ‘டுவிட்டர் போல’ இந்திய மொழிகளில் குரல் கொடுக்கும் தளம் ஆகும். இது இந்தியர்களை இணைக்க, கருத்து தெரிவிக்க மற்றும் ஈடுபட நம்பகமான தளத்தை உருவாக்குகிறது. படைப்பாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் மற்றும் விரும்பும் படைப்பாளர்களை பின் தொடரலாம் என்பதால், ‘கூ’ செயலி உரையாடல்களை எளிதாக்குகிறது என்று ‘கூ’ இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய மொழிகளில் தளமாக கூ. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாய் மொழியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவில் வெறும் 10 சதவித பேர் தான் ஆங்கிலம் பேசுகிறார்கள். 90 சதவீதம் பேர் இந்திய மொழிக ளையே விரும்புகின்றனர். தங்கள் சொந்த மொழியில் வெளிப்படுத்தவும் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களை கண்டறியவும் சரியான தளம் இந்தியா வில் குறைவு தான். இந்திய மொழிகளை விரும்பும் இந்தியர்களுக்கு கூ ஒரு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டும்.

இந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி போன்ற பல மொழிகளில் பெரும் வரவேற்பை ‘கூ’ பெற்று இருக்கிறது.

முதலீடு நிபுணர் அனுராக் ராம்தான் கூறுகையில், அப்ரமேயா மற்றும் மாயங்க் இருவரும் (கூ செயலியின் இணை நிறுவனர்கள்) இதற்கு முன்பு பெரிய இன்டர்நெட் கம்பெனிகளை உருவாக்கியுள்ளனர் என்றார்.

இந்த செயலி தொடங்கி பத்தே மாதங்களில், அனைத்து தரப்பினரிட மிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இது 2020 ம் ஆண்டிற்கான கூகிள் பிளேஸ்டோரின் சிறந்த முக்கிய செயலி அங்கீகரிக்கப்பட்டது.

செயலி விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ. 30 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் 3ஒன்4 கேப்பிடல் இதில் முதலீடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *