செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம்: ஐசிசி அறிவிப்பு

லண்டன், ஜூலை 13–

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக ஒரு ஓவர் வீசிய காரணத்துக்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹோவ் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் ஷஃபாலி வா்மா 48, கெளர் 31 ரன்கள் சோ்த்தனா். அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே எடுத்தது. இங்கிலாந்தில் டேமி பியூமௌன்ட் 59 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசியதால் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *