செய்திகள்

இந்திய பெருங்கடலுக்குள் சீன கண்காணிப்புக் கப்பல்

டெல்லி, டிச. 6–

இந்திய பெருங்கடலுக்குள் சீன கண்காணிப்புக் கப்பல் நுழைந்துள்ளதை, இந்திய கடற்படை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. வணிகத்தில் உலகின் கிழக்கு பகுதியையும் மேற்கத்திய நாடுகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்தியபெருங்கடல் இருப்பதால், அதில் ஆதிக்கம் செலுத்துபவர் உலக வர்த்தகத்தில் பெரும் நாடாக விளங்குவர் என்பது திண்ணம்.

மீண்டும் கண்காணிப்பு கப்பல்

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா தனது ஏவுகணைகளை சோதனை செய்யும்போது, சீனாவின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தது . அப்போதே அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதே போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இந்தியா மற்றொரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டுள்ள நிலையில், மீண்டும் சீன உளவுக் கப்பல் நேற்று இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப்பெருங்கடல் பகுதியுள்ளே நுழைந்துள்ளதை இந்திய கடற்படை கண்டுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *