வாழ்வியல்

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரியின் 4 மாத பயிற்சி!

இன்று இந்திய அரசு, பல அமைச்சகங்கள் மூலம் மக்களுக்கு, மாணவர்களுக்கு, தொழில் முனைவோருக்கு பல பயிற்சிகள் தந்து ஊக்குவிக்கிறது. இப்போது ஜவுளி அமைச்சகம், சேலத்தில் உள்ள தனது தொழில்நுட்பக் கல்லூரி மூலம், ‘கைத்தறி தொழில்முனைவோர்’ சான்றிதழ் (4 மாதம்) படிப்பை நடத்துகிறது. கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் இளைஞர்கள் இதில் சேர்ந்து படிப்பலாம்.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு / அதற்கு மேல்.

வயது : 18 லிருந்து 30

முக்கிய தகுதி : விண்ணப்பதாரர் கைத்தறி நெசவு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

உதவித் தொகை : 1 வேலை நாளுக்கு ரூ.210/–

ஆலோசனை : படித்து முடித்தப்பின் ஜவுளி தொழில் செய்ய தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும்.

பாடத்திட்டம் : தொழில் முனைவோர் மேம்பாடு, நிதி மற்றும் சந்தை மேலாண்மை, இ–வணிகம், தொழில் முறை ஆங்கிலம், வங்கிக்கடன் வழிமுறைகள், வடிவமைப்பு, கைத்தறி நெசவு, கணினி வழி ஜவுளி வடிவமைப்பு, துணி வடிவமைப்பு, தரக்கட்டுப்பாடு

விடுதி வசதி: பயிற்சி பெற விரும்பும் ஆண்/பெண்களுக்கு, தனித்தனி விடுதி உண்டு.

முழு விவரம் பெற:

இயக்குனர், இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி,

ஃபோக்ஸ் காம்பவுண்ட், தில்லை நகர், சேலம்–636001

போன்: 0421 2296943, E–iiht.tnsim@nic.in, www.iihtsalem.edu.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *