செய்திகள்

இந்தியா வரும் ரஷிய அதிபர் புதின் : மோடியுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, நவ.27-

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வருகிற டிசம்பர் 6–ந்தேதி அன்று இந்தியா வருகிறார்.

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே வருடாந்திர உச்சி மாநாடுகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த உச்சி மாநாடு நடக்கவில்லை.

இந்த ஆண்டு 21வது உச்சி மாநாடு, டெல்லியில் வரும் டிசம்பர் மாதம் 6ந்தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகிறார். இரு நாடுகளின் உச்சி மாநாட்டின்போது அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இச்சந்திப்பின் போது 2 நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *