டெல்லி, ஜன. 8–
நாடு முழவதும் 259 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சிக்கல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக இன்று ஒரு சில ரயில்கள் தாமதமாகி வந்து சேர்ந்தன. 42 ரயில்களின் சென்று சேரும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 45 ரயில்களின் பயணத் தொலைவு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 34 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் அறியலாம்
மேலும் 20 ரயில்கள் வேறுவழி பாதைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கோரக்பூர், லக்னோ, கோட்டயம், அமிர்தசரஸ், கொல்கத்தா, ஜம்மு தாவி, ரூர்கேலா, ஜக்தல்பூர், புவனேஸ்வர், சூரத், சப்ரா, தர்பங்கா, அகமதாபாத், உதய்பூர், ஷாலிமார், வார்தா, அமராவதி, பதன்கோட், பதிண்டா, பல்வால் போன்ற பல நகரங்களில் ரயில் சேவை பாதிக்கப்ட்டுள்ளது.
ஜனவரி 8 ந்தேதி ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் முழு பட்டியலை பயணிகள் அறிந்து கொள்ள, என்டிஇஎஸ் (NTES-National Train Enquiry System) இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். மேலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகளின் முன்பதிவுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, பயணிகளின் கணக்குகளில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் என்றும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.