செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல ஐக்கிய அரபு அமீரகம் தடை

அபுதாபி, ஜூலை 2–

கொரோனா வைரஸ் பரவலால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்ல, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்து உள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மற்றும் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், லைபிரியா, சியாரா லியோன், காங்கோ குடியரசு, உகாண்டா, ஜமிபியா, வியட்நாம், நைஜிரியா, தென் ஆப்பிரிக்க ஆகிய 14 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக மக்கள் பயணிக்கக்கூடாது. அங்கிருந்து வரும் விமான சேவைக்கும் 21–ந்தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சரக்கு விமானப் போக்குவத்து, வர்த்தக ரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *