இஸ்லாமாபாத், ஏப்.18–
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஷாபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:
இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இதை அடைய முடியும். பிராந்திய அமைதி, பாதுகாப்பில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
காஷ்மீர் உள்ளிட்ட தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.