செய்திகள்

இந்தியாவில் 9 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூன் 15–

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 8,084 பேருக்கும், நேற்று 6,594 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று வேகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவிலிருந்து இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 88 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகினர். இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 792 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,637 ஆனது. இந்தியாவில் இதுவரை 195.50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 13 லட்சத்து 58 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 16 லட்சத்து 88 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 68 லட்சத்து 53 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 85 லட்சத்து 745 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63 லட்சத்து 34 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.