செய்திகள்

இந்தியாவில் 89 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 3-

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது .

 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 714 பேர் நோய்த்தொற்றுக்கு  பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 714 பேர் பலியாகி நிலையில். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *