செய்திகள்

இந்தியாவில் 6 வது நாளாக 10 % கீழ் தொற்றுப் பதிவு

டெல்லி, மே 30–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3460 பேர் உயிரிழப்பு

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 320 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் 21 லட்சத்து 14 ஆயிரத்து 508 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 25 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 6 வது நாளாக புதிய பாதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *