செய்திகள்

இந்தியாவில் 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சிகிச்சையில் 63 ஆயிரத்து 878 பேர்

புதுடெல்லி, மார்ச் 5–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6,396 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,921 ஆயிரமாக குறைந்தது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 878 ஆக குறைந்தது.

நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 651 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் 289 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் இதுவரை 178 கோடியே 55 லட்சத்து 66 ஆயிரத்து 940 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37.66 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 9,157 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 6 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 71,871 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.