செய்திகள்

இந்தியாவில் 5335 பேருக்கு கொரோனா:13 பேர் பரிதாப பலி

டெல்லி, ஏப். 6–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5335 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் 13 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,435 பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5335 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை-23,091 லிருந்து 25,587 ஆக உயர்ந்துள்ளது.

13 பேர் பரிதாப பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 8 பேரும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தலா 2 பேரும், பஞ்சாபில் ஒருவர் என மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,929 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,82,538 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,66,18,366 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,993 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *