செய்திகள்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 35,493 பெண்கள் வரதட்சனை கொடுமையால் மரணம்

உத்தரப்பிரதேசம் மரணத்தில் முதலிடம்

நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் தகவல்

டெல்லி, டிச. 15–

கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் பெண்கள் வரதட்சணையால் மரணமடைந்துள்ளதாக உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வரதட்சணை கொடுமை தொடர்பாக விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமான மரணங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக பீகாரில் 5,354 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 2,859 மரணங்களும் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழ்ந்துள்ளன.

நாள்தோறும் 20 மரணங்கள்

மேற்கு வங்கத்தில் 2,389, ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தென் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 198, கேரளா 52, கர்நாடகா 934 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆண்டுவாரியாகப் பார்க்கையில், 2017ஆம் ஆண்டில் 7,466, 2018 இல் 7,167 மரணங்களும், 2019 இல் 7,141 வரதட்சணை மரணங்களும் நிகழ்ந்துள்ளன. 2020இல் 6,966 மரணங்கள் மற்றும் 2021 இல் 6,753 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் சராசரியாக நாள்தோறும் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *