செய்திகள்

இந்தியாவில் 3-வது நாளாக குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மே 4–

இந்தியாவில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3-வது நாளாக குறைந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதில் உச்சபட்சமாக கடந்த 1ந்தேதி 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது. இதுவரை 1 கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றுடன் 34 லட்சத்து 47ஆயிரத்து 133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று (மே 3) ஒரே நாளில் 16 லட்சத்து 63 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *