டெல்லி, ஜன. 25–
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் 1922
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1922 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,737 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,547 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,20,32,75,159 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,12,020 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.